மாத
தவணை - EMI - excuse
my ignorance
என் அறியாமையை
மன்னித்து விடுவீர்களாக !. ஏன்
emi ஒரு
அறியாமை ? வீடு வாங்க , வாகனம் வாங்க , பெரும் தொகை கையில் இல்லை என்னதான் செய்வது ? ஒரே தீர்வு- கடன் - மாத தவணை . இப்படி தான் நினைக்கிறார்கள்
பலர். தங்கள்
வாழ்வில் கடன் பட்டு 45-50 வயது வரை திருப்ப கட்ட ;பல தியாகம் செய்து
, உழைத்து ஓடாய் தேய்த்து , ஒரு கட்டத்தில் வாழ்வை தொலைக்கிறார்கள் .
என்னதான்
சொல்கிறீர்கள் ?மாத தவணை சரியா தவறா
?
1. சொத்து
,வாகனம் , பொருட்கள் -( குளிர் சாதனம் ,தொலைக்காட்சி , கைபேசி ) எது வாங்குவதாக
இருந்தாலும் 50 % முன்பணம் காட்டாமல் வாங்குவதில்லை என முடிவெடுக்க வேண்டும்
. முன்பே சொன்னது போல 'instant gratification
'- உடனடியாக நினைத்த
மாத்திரத்தில் வாங்கும் எண்ணத்தை கைவிடவேண்டும் .
பொருட்களை
சந்தை படுத்துதலில் ஓரு
உக்தியை கையாள்வார்கள்
- 'impulsive buying '. பார்த்த
மாத்திரத்தில் வாங்குவது . நாம் சில கடைகளில் , இனிப்புகள் ,சாக்லேட்கள் ,பணம் செலுத்தும் இடத்தில இருப்பதை பார்த்திருப்போம் . குறைந்த செலவு பொருட்கள் , தின்பண்டங்கள் நம் கண் முன்ன இருப்பதை பார்த்த குழந்தைகள்,அவைகளை கேட்க ,மறுப்பு கூறாமல் நாம் வாங்குவதில்லையா ? இதே
மன நிலையில் தான் நிறுவனங்கள்
நம்மை அணுகுகிறார்கள் . நம்மிடம் பணம் இல்லாவிட்டாலும் , 'பிறகு கட்டுங்கள் ' என்ற ஒற்றை வார்த்தையில் மயங்கி கடனாளி ஆகிறோம் .
2. ஆசைக்கும்
தேவைக்கும் உள்ள வித்தியாசம் : வாகனம் என்பது தேவை
- 25 லட்சத்திற்கு வாங்க வேண்டும் இந்த மாடல் , இந்த நிறம் , இந்த வசதி
வேண்டும் என நினைப்பது ஆசை .
எனக்கு
தெரிந்த ஒருவர் ,85 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு தொலைக்காட்சி பெட்டி வாங்கினார் . அவரின்
மாத வருமானம் 24 ஆயிரம் ரூபாய். ஆசை
பட்டு வாங்கிவிட்டார் . அனால் அதை பார்க்க அவருக்கு நேரமில்லை . மாதம் 7 ஆயிரம் கட்ட கூடுதலாக 2 மணி நேரம் உழைக்க வேண்டிய கட்டாயம் . சரியாக 13 மாதங்கள் , பழுது அடைந்து விட்டது . சரி செய்ய 9 ஆயிரம் தேவை . பொருளுக்கான உத்திரவாத காலம் முடிந்து விட்டது . 9 ஆயிரம் என்பது அவருடைய
மாத சம்பளத்தின் மூன்றில் ஒரு பகுதியை விட அதிகம் . மிகுந்த சிரமத்திற்குள்ளானார் . இப்படியம் சிலர் .
என்ன
செய்திருக்க வேண்டும் ? சிந்திப்போம்
3.
அது என்ன 50-30-20 விதி ? நம்மை
பல ஆபத்தில் இருந்து காப்பாற்ற வல்லது
இந்த எண்கள் . அடுத்த பாகத்தில் விவரிக்கிறேன்


