முதல் இரண்டு பாகத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்ப்புக்கு தலை வணங்குகிறேன் . இந்த ஊக்கம் மென்மேலும் சிறந்த படைப்புகளை தர வேண்டும் என தூண்டுகிறது .
பணம் பற்றிய புரிதலின் முதல் அடியாக செலவுகளை இரண்டு பிரிவுகளாக வைக்க சொல்லியிருந்தோம்
. இந்த செயல் மூலம் ,நமக்கு செலவுகள் ஒரு குறிப்பிட்ட
சதவிகிதம் குறைத்துக்கொள்ள கூடியதாக உள்ளது என்ற
ஒரு உண்மை விளங்கியிருக்கும் .
செலவுகளை பற்றி விவாதிக்கும் போது கடன் அட்டைகள் என்ற
(கிரெடிட் கார்டுகள் ) பற்றி கூற வேண்டியது
அவசியமாகிறது . அறிந்தோ அறியாமலோ இ .எம் . ஐ , கிரெடிட் கார்டு, தனி நபர் கடன் ( பர்சனல் லோன் ) என்ற மிக கூரிய வாள்கள் நம்மிடம் வந்துவிட்டது . ஏன் அவை' வாள்கள் ' ? நம்மை
பாதுகாக்கவும் முடியம் , நம்மை அழித்து விடவும்
முடியும் .
கடன் அட்டைகளை பற்றி அறிந்துகொள்ள அதன் பின்னால் ஒளிந்துள்ள
வியாபாரத்தை புரிந்து கொள்ள வேண்டும் . ஒரு ஆண்டிற்கு கடன் அட்டைகள் மூலம் நடக்கும்
வியாபாரம் மட்டும் பல லட்சம் கோடிகள் .
இந்த உண்மையை நம்பத்தான் வேண்டும் . நேரடியாக அவர்களுக்கு பல வழிகளில் அவைகளுக்கு வருமானம் கிடைக்கும் தான் . ஆனால்
, பல நுகர்வோர்கள் கடன் அட்டைகள் மூலம் பொருள் பெற்று தவணை தேதியில் காட்டாமல்
, வட்டி காட்டுவதால் தான் அவர்கள் லாபம் ஈட்டுகிறார்கள்
. அதாவது தவணை தொகையை தள்ளி கட்டுவதும் , குறிப்பிட்ட குறைந்த தொகையை கட்டுவதும் ,
நம்மை பெருந்தொல்லைக்கு உள்ளாக்கும் . அது கடன் அட்டை நிறுவனங்களுக்கு பெருத்த லாபத்தை பெற்றுத்தரும்
.
ஒரு பெரும் சமூகம் , கடனாளியாகி ,தூக்கம் தொலைத்து ,வாழ்விழந்து
,ஊரை மாற்றி , என பல விஷயங்களை மாற்றி வாழ்கிறார்கள் என்றால் அது மிகை அல்ல .
சமீபத்தில் இது பற்றி ஒரு சகபயணியிடம் பேச நேர்ந்தது
. அவர் 'நாடே கடன் வணங்குகிறது , இதில் நான் எம்மாத்திரம்' என்று அங்கலாய்த்துக்கொண்டார்
. இது என்ன எதிர் மறைச்சிந்தனை . இவர்கள் போன்றவர்களின் சிந்தனை வீட்டையும் ,நாட்டையும் எதிர் திசையில் இழுத்து செல்லும் என்று சொல்லத்தான் வேண்டுமா ?
சரி செய்ய , என்ன
செய்ய வேண்டும்? எப்பாடு பட்டாலும் முதலில் கடன் அட்டைகளின் கடன்களை கட்ட வேண்டும். முதல் காரணம் : அதிக வட்டி- கடன் சுமை , இரண்டாவது மன உளைச்சல் .
எப்படி கட்டலாம் ? பல வழிகள் உண்டு.
சிலவற்றை கூறுகிறேன்:
1. உங்கள் வங்கி சேமிப்பு , 2. பி .எப் எனப்படும் வைப்பு நிதி , 3. எல் .ஐ .சி பாலிசி மீது கடன் , 4. அரசு சார்த்த வங்கி நகை கடன்
( இவை கடன் அட்டைகளை விட குறைந்த வட்டிகள்)
மேலும் இவற்றிற்கு நம்மால் முடிந்த அளவு கடன் தொகையை திரும்ப கட்டலாம் . மாதம் இவ்வளவு என கட்ட வேண்டிய அவசியம்
இல்லை .
சென்ற பாகத்தில் கேட்ட திருக்குறள் :
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.
தன்னிடம் உள்ள பொருள் கொண்டு செயல் செய்வது எப்பொழுதும் சிறப்பானது.
தொடர்ந்து பயணிப்போம்


No comments:
Post a Comment