தங்கம்
வாங்கலையோ தங்கம்
ஒரு
மிகப்பெரிய வெற்றியின் அடையாளமாகவும் ,பெருமையின் சின்னமாகவும் , பக்கத்து வீட்டுக்காரியின் பொறாமையாகவும் , சில ஆண்களின்
தூக்கமின்மையாகவும் இருப்பது ....... கண்டுபிடித்துவிடீர்களா வேறென்ன என்ன?
தங்கம் தான் .
ஒரு
சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு
இளம் பொறியாளர் முத்து
.அவருக்கு வெளிநாட்டில்
தங்கி வேலை செய்யும் வாய்ப்பு (on site ) கிடைக்கிறது
. முத்து வின் நண்பன் கையில்
இருக்கும் இரண்டு லட்சம்
சேமிப்பை கை
மாற்றாக கேட்கிறார் . மிக
நெருங்கிய நண்பன் ஆதலால் முத்து கொடுக்கிறார் .பத்தே நாளில் நண்பன் தருவதாகவும் வாக்களிக்கிறார் . முத்து வெளிநாடு
செல்ல , நாணயமுள்ள நண்பன் பணத்தை வங்கியில் செலுத்த வங்கி கணக்கு எண் தா என கேட்கிறார்
. ஆனால் முத்து
' நான் ஊரில் இல்லை , இவ்வளவு பணத்திற்கான செலவுகள்
எனக்கும் குடும்பத்திற்கும்
இல்லை , நீயே ஏதாவது
முதலீடு செய் என்றார்
.
அந்த நண்பன்
, அவரின் வீட்டில் உள்ள
தன் பாட்டியை
ஆலோசனை கேட்கிறார் . பாட்டியின் ஆலோசனை படி இரண்டு லட்சத்திற்கும் தங்க சங்கிலி வாங்கி , போட்டோ வையும் பில்
லையும் வாட்ஸாப்பில்
அனுப்புகிறார் . சங்கிலியை பத்திரமாக
தன் வங்கி லாக்கர் இல் வைக்கிறார் . எல்லாம்
நல்ல படியாகவே நடந்தது .
முத்து
க்கு இரண்டு
ஆண்டு ப்ராஜெக்ட் முடிந்து , வேறு ஒன்று கிடைக்க அப்படியே கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆகிவிட்டது . நடுவில் சில தடவை வந்து ,ஊரில், பெற்றோரையும் நண்பர்களையும் பார்த்து செல்கிறார் .
6 ஆண்டுகள்
கழித்து வந்து ,இங்கே வீடு வாங்க எண்ணுகிறார் . கையிருப்பு
போக மேலும்
3 லட்சம் பணம்
தேவை தங்க சங்கிலியை விற்க எண்ணுகிறார் . நண்பன் லாக்கரில் இருந்து கொண்டுவந்து கொடுக்க , இருவரும் நகைக்கடைக்கு செல்கிறார்கள் . நகையின் மதிப்பை கேட்டவர்
, தலை சுற்றி விழாத குறை , வாங்கிய விலையை விட இருபதாயிரம் குறைவு .அதாவது 1.8 லட்சம் மட்டுமே . இது எப்படி சாத்தியம் ?
நாம்
பல முறை செய்தி தாளிலும் ,டிவி யிலும் பார்க்கிறோம் , தங்கம் வரலாறு காணாத உச்சம் , கிராமுக்கு ரூபாய் 30 உயர்வு
இப்படி . இவ்வாறு இருக்க வாங்கிய விலையை விட 20 ஆயிரம் எப்படி குறையும் .?
10 ஆண்டுகளுக்கு முன் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 3100 ரூபாய் ( 2012 ம் வருடம் ) . செய் கூலி , சேதாரம் 10 % கூடுதல் . வாங்கிய நிமிடமே 10 % விலை அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது .அன்றைய விலை அதுவும் சுமார் 3050 ரூபாய் .( ஜூன் 2019 ம் வருடம் மாத துவக்கத்தில் ). இப்படி இருக்க விற்பனை விலை எப்படி கிடைக்கும் ?
ஏதேனும்
இரண்டு நாட்களை எடுத்து நமக்கு ஏற்றார் போல கூறுவது என் நோக்கமல்ல
. இதில்
கவனிக்க வேண்டிய விஷயங்கள் 1. இதில் முத்து தன்
முதலீட்டை பற்றி அக்கறை காட்டவில்லை . 2. அடுத்தவரின் ஆலோசனை: - ஆலோசனை வழங்கியவர் தங்கத்தில் லாபம்
பெற்றிருக்கலாம் , எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் ஏற்றதாக
அமையாது .3. நோக்கம் அற்ற முதலீடு - எதற்கு முதலீடு செய்கிறோம் ,எவ்வளவு காலம், கிடைக்க வேண்டிய தொகை போன்றவை
பற்றிய தெளிவின்மை 4. தேர்ந்தேடுத்த
முதலீடு - தங்க நகை என்பது அணிந்து
அழகு பார்க்க மட்டுமே - இதுவே அதன் முதல் நோக்கம் , தேவை படும் பொது விற்க , அடகு வைக்க இதெல்லாம் இரண்டாம் பட்சம் தான் . நகையின் சந்தோஷத்தை விலை பேச முடியாது
. அது போலவே அணிகலனை முதலீடாக பார்க்க இயலாது . தங்கத்தின் மீது முதலீடு
செய்ய வேறு பல வழிகள் உண்டு
.
சரி
தங்கம் லாபம் தருமா ? தரும்...ஆனால் தராது ...எப்படி இரண்டும் சாத்தியம் ?
கடந்த
ஒரு வருடத்தின் லாபம் 15 % ஒரு
வருடத்திற்கு முன் ஒரு
லட்சம் ரூபாய்க்கு தங்க நாணயங்களை வாங்கி இன்று விற்றால் கிடைக்கும் லாபம்
15 ஆயிரம் . உண்மைதான் . அதே தங்கம் கடந்த 5 ஆண்டுகளில் கொடுத்த லாபமும் ஆண்டுக்கு 9.15 % மட்டுமே . இதுவே
2009 ம் வருடம் விலை படி ஒரு கிராம் ரூபாய்
1450 - நமக்கு கிடைக்கும் வருமானம் வருடத்திற்கு 7.15 % மட்டுமே . சரி 2009ம் வருடம் வேண்டாம் 2006 ம்
வருடம் என கொண்டால் 10.5% வருமானம்
, அப்பாடா இப்போது சொல்லுங்கள்
, தங்கம் லாபம் தானே
?
அதனால்
தான் சொன்னேன்
- தங்கம் லாபம்
தரும் சில நேரங்களில் தராது . காலம் தான் பதில் சொல்லும் .
சில
மூத்த குடிமக்கள் அவர்களுக்கு தெரிந்த - பழக்கப்பட்ட முறையாக
செய்த முதலீடு தங்கம்
, நிலம் , வீடு மட்டுமே . அதில் அவர்கள் வெற்றி கிடைத்தது . அவர்கள் நிதானம் காத்தார்கள் .
30 ஆண்டுகளுக்கு முன் தங்கம் வாங்கி பாதுகாத்து
இன்று விற்றால் பெருத்த லாபம் தந்திருக்கும் தான்
. ஆனால் அதே போன்று அடுத்த 30 ஆண்டுகள் இருக்குமா?
நகைகளின்
மீது மோகம் கொண்டு
வருடத்திற்கு 4-5 முறை
அணிந்து , வீட்டில் ,பேங்க் இல் வைத்த பூட்டி ,பாதுகாத்து அதை
முதலீடாக பார்ப்பது ஏற்புடையது அல்ல .
சரி
நகை வாங்கலாமா வேண்டாமா?
நம்
முதலீடு தங்கமாக இருக்கலாம் - நகைகளாக அல்ல - காசுகளாக கட்டிகளாக , ETF எனப்படும் பாத்திரங்களாக என
பல முறைகள் உள்ளது .
எவ்வளவு
வாங்கலாம்? பல
பொருளாதார நிபுணர்களின் அறிவுரைப்படி நம்
மொத்த முதலீட்டில்
2-5 % இருத்தல் நல்லது . 10 % க்கு மிகாமல் இருப்பது உத்தமம் . வருடத்தில் 50 ஆயிரம் சேமிக்க நினைத்தால் , தங்கதின் மீது முதலீடு 5 ஆயிரம் இருப்பது நலம் .
இப்போது
சொல்லுங்கள் உங்கள் சிந்தனை எப்படி ? .. மீண்டும் தொடர்வோம்

No comments:
Post a Comment